சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 440 என்கிற புதிய உச்சத்தை தொட்டது
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 680க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 837 ரூபாயாகவும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1ரூபாய் அதிகரித்து 49 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலையினால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விலை உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.