சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாள்தோறும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை, இன்று அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 895 ரூபாய்க்கும், சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 710 ரூபாய்க்கும், சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 50 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 100 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.