புதிய உச்சத்தை தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 752 ரூபாய் உயர்ந்து, 33 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 24 கேரட் தங்கம் இன்று கிராமுக்கு 98 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 374 ரூபாய்க்கும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு 94 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 166 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு 752 ரூபாய் உயர்ந்து, 33 ஆயிரத்து 328 ரூபாய்க்கும், 24 கேரட் தங்கம் சவரனுக்கு 784 ரூபாய் உயர்ந்து 34 ஆயிரத்து 992-க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து 53 ரூபாய் 30 பைசாவுக்கும், கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்து 53 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version