உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 168 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

நாள்தோறும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை, இன்று அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, 24 கேரட் தங்கம் கிராமுக்கு 64 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 88 ரூபாய்க்கும், சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 704  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் தங்கம் கிராமுக்கு 64 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 896 ரூபாய்க்கும், சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து168 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் 30 காசுகள் அதிகரித்து 52 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 300 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version