நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கம், இன்று சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 690-க்கும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 847 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 776 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 50 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 200 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Exit mobile version