பனி காலம் துவங்கியுள்ளதால், சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடுமையான பனிபொழிவு இருக்கும். காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடும் பனிபொழிவால், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, ஆப்பிள் வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிமாச்சலில் இருந்து வந்திருக்கும் ஆப்பிள்களுக்கு வரவேற்பு குறைவாக இருப்பதாகவும், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் கமலா ஆரஞ்ச், சீதாப்பழம் மற்றும் மாதுளை பழம் உள்ளிட்ட பழங்களின் விற்பனை எதிர்ப்பார்த்த அளவு இல்லை என பழ வியபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 50 விழுக்காடு வீழ்ச்சி என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.