பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

ஓணம் மற்றும் ஆவணி முகூர்த்த சுபநிகழ்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் மலர் சந்தையில் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

கேரளாவில் நாளை திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனிடையே இன்று வரலட்சுமி விரதம், சுமங்கலி
பூஜைகள், திருமண நிகழ்ச்சிகள் என சுபநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனர். இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை கலை கட்டியது. அதே நேரத்தில் பூக்களின் விலையும் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ கிலோ இன்று ஆயிரத்து 300 ரூபாய்க்கும்
விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் 3 மடங்கு அதிகரித்து உள்ளது. பூக்களின் விலை உயர்ந்து உள்ள நிலையில், விற்பனையும் அதிகரித்து உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் மதுரை மலர் சந்தையில் 1 கிலோ மல்லிகைப் பூ 2 ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மல்லிகைப் பூ வழக்கமாக 10 டன்கள் அளவிற்கு வரும்நிலையில், வியாழக்கிழமை 5 டன் மட்டுமே வந்துள்ளது. இதனால் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி விலை 5 மடங்கு உயர்த்தி 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

Exit mobile version