விலை வீழ்ச்சியால் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கத்திரிக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக்கி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பழனி அருகே நெய்க்காரபட்டி, காவலப்பட்டி, கரடிக்கூட்டம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கத்திரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. கத்திரிக்காய் சாகுபடிக்கு ஏக்கருக்கு முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து அறுவடைக்கு தயாரான நிலையில், 30 கிலோ எடையுள்ள கத்திரிக்காய் ஒரு மூட்டை, நூறு ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த விலைக்குறைவால், காய்களை பறிக்கும் தொழிலாளிகளுக்கு கூலி கொடுப்பதற்கு கூட கட்டுப்படி ஆகாது என்பதால், காய்களை பறிக்காமல் கால்நடைகளுக்கு தீவனமாக்கி வருவதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். எனவே, தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.