60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும், உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது என, பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சருக்கு, நீலகிரி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். 1957 ஆம் ஆண்டு உதகையை அடுத்துள்ள முத்தொரை பகுதியில், உருளைகிழங்கு ஆராய்ச்சி மையத்தை, மத்திய அரசு தொடங்கியது.
இந்த ஆராய்ச்சி மையம், பலவகையான உருளைக்கிழங்கு ரகங்களை கண்டுபிடித்து, அவற்றின் விதைகளை விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு அளித்து வந்தது. இந்நிலையில் இந்த ஆராய்ச்சி மையத்தை மூட, மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
இது, நீலகிரி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆலையை மூடக்கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதினார். அவரின் இந்த முயற்சிக்கு நீலகிரி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.