வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இந்தநிலையில், வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
அதேபோல் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், வட தமிழக மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும் எனவும், இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.