வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ள மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 2 சென்டி மீட்டர் மழையும், கடலூர், பாம்பன், புதுச்சேரி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version