தமிழக கடலோர பகுதிகளில் வரும் 30-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழக கடலோர பகுதிகளில் வரும் 30-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாளை முதல் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.30-ம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள இந்திய வானிலை மையம், அன்று கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Exit mobile version