தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்னரே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி போயுள்ளனர். குறிப்பாக வேலூர், திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் வெயில் சதமடித்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்தநிலையில் இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.