அரபிக் கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல், கிழக்கு, மத்திய அரபிக் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இது இன்று புயலாக மாறக்கூடும் என தெரிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், இதனால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இல்லை என அறிவித்துள்ளது. அதேசமயம் நாளை அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை வரை அனல் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.