பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் விற்பனை அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத் தார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத் தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை,ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் பொங்கலை ஒட்டி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக 700 ரூபாய் வரை விற்பனையானது. ரஸ்தாலி வாழைத்தார் 500 ரூபாய்க்கும் பச்சைநாடன் வாழைத்தார் 400 ரூபாய்க்கு விற்பனையானது. வாழைத்தார்கள் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version