முன்விரோதம் காரணமாக இளைஞர்களை கடுமையாக தாக்கிய காவலர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், முன்விரோத காரணமாக இரண்டு இளைஞர்களை, காவலர் லத்தியால் தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் காவலராக பணிப்புரிந்து வரும் தனசேகரன் என்பவருக்கும், பன்னீர்செல்வம் நகரைச் சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 12ம் தேதி பிரதீப் தமது உறவினர் அமிர்தராஜ் என்பவருடன் சேர்ந்து வந்து, காவலர் தனசேகரனின் உறவினர் வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையறிந்த காவலர் தனசேகரன் பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் தன் கையில் வைத்திருந்த லத்தியால் இருவரையும் கடுமையாக தாக்கினார். 

காவலர் தனசேகரன் தாக்கியதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சீர்காழி போலீசார், காவலர் தனசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version