பஞ்சாப் மாநிலத்தில் முதல் பிறந்தநாளை கொண்டாடிய குழந்தையின் வீட்டுக்கு நேரில் சென்ற காவல்துறையினர், கேக் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தனர் .
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கால் பலரும் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியை சேர்ந்த மய்ரா என்ற பெண் குழந்தை நேற்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியது. இதையறிந்த காவல்துறையினர், குழந்தை மய்ராவின் வீட்டுக்கு சென்றதுடன், பெற்றோரை அழைத்து பிறந்தநாள் பரிசாக கேக் வழங்கினர்.
மேலும் பிறந்தநாள் பாடல் பாடி காவல்துறையினர் இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
Discussion about this post