நாகை சோதனைச் சாவடி அருகே 1 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்

நாகை சோதனை சாவடி அருகே கிடைத்த மர்மப் பையில் சுமார் 1 கோடி மதிப்புள்ள 27 தங்க கட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக – புதுச்சேரி மாநில எல்லையான நாகை மாவட்டம், நண்டலாற்று சோதனைச் சாவடி அருகே மர்ம பை ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதைக் கைப்பற்றிய காவலர்கள், பொறையார் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அதை போலீசார் ஆய்வு செய்கையில், அதனுள் 26 முழு தங்க கட்டிகளும், 1 அரை கிலோ தங்ககட்டியும் இருந்தது தெரியவந்தது. சுமார் 3ஆயிரத்து 75 கிராம் எடைகொண்ட இந்த தங்க கட்டிகளின் மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தங்க கட்டிகளை கடத்தி வந்தது யார் என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version