சென்னையில், பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கல்யாண சீர்வரிசை வழங்கிய காவல் ஆய்வாளரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
செங்குன்றத்தை சேர்ந்த சுகன்யா தனது சித்தப்பா வீட்டில் தங்கையுடன் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் சுகன்யாவிற்கு கோயமுத்தூரிலிருந்து வரன் அமைந்ததால் திருமணம் செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தினால் அவரது சித்தி மற்றும் சித்தப்பா பலரிடம் உதவி நாடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சுகன்யாவின் திருமணத்திற்கு உதவி செய்ய தலைமைச் செயலக குடியிருப்புகாவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி முன்வந்தார். சுகன்யாவின் குடும்பத்தை அழைத்த ஆய்வாளர் ராஜேஸ்வரி, அரை பவுன் கம்மல், 1 கிராம் மூக்குத்தி, வெள்ளி கொலுசு, பீரோ, கட்டில் என 60 ஆயிரத்திற்கான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.