தமிழகத்தை கஞ்சா நிறைந்த மாநிலமாக மாற்றியது விடியா அரசு!

தமிழகத்தில் கடந்த 20 மாதகால விடியா திமுக ஆட்சியில் போதை பொருட்களை கட்டுப்படுத்த, திராவிட மாடல் முதலமைச்சரும், காவல்துறையும் தினந்தோறும், வாரம்தோறும், சிறப்பு வேட்டை, 2.0, 3.0 என பல பெயர்களை சூட்டி, நடவடிக்கை எடுப்பதாக கூறி கம்பிகட்டும் கதையெல்லாம் சொன்னாலும், அனைத்தும் கண் துடைப்பு நாடகங்களாகவே உள்ளது என்பதை இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் 50 கிலோ கஞ்சா, தேனியில் 1,200 கிலோ, கோவையில் 8 கிலோ கஞ்சா, 28 கிலோ கஞ்சா சாக்லேட் என டன் கணக்கில் சிக்கியுள்ளது.
கஞ்சாவே இல்லை என கூப்பாடு போடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது கைப்பாவையான தமிழக காவல்துறை கண்களுக்கும் இதெல்லாம் தெரியவில்லை போல.

கஞ்சா புழக்கத்தை தடுக்க வெற்று விளம்பரம் தேடும் வேலைகளை விடுத்து, போதையில் தள்ளாடும் தமிழகத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும் தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டுள்ளது எனவும், 50 லட்சம் மாணவர்களில் 9 சதவிகிதம் பேர் போதைக்கு அடிமையாகி இருப்பது வேதனையளிப்பதாகவும், இதற்கு திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால், இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிகட்சித்தனைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நியுஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுகவின் அரசு தோல்வியுற்ற அரசாகவும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய அரசாகவும், நிர்வாக சீர்கேடு மிகுந்த அரசாகவும் செயல்பட்டு வருகிறது. போதை பொருட்களை கட்டுப்படுத்துவதில் தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக கஞ்சா, கொக்கைன், போதை மாத்திரை போன்ற போதை பொருட்களுக்கு இளைஞர் சமுதாயம் அடிமையாகி இருப்பது வேதனையளிக்கும் நிகழ்வாக உள்ளது. பள்ளி, கல்லூரி, இளைஞர்கள் என வருங்கால சமுதாயம் போதையால் சீரழிவது வேதனையின் உச்சமாக உள்ளது.

வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதற்கு தமிழகத்தில் பதிவு செய்யப்படும் போக்சோ வழக்குகளே சாட்சியாக உள்ளன விளையாட்டு, வெளிஉலகப் பழக்கம் போன்றவை இல்லாமல் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். இதை நிர்வாக திறனற்ற திமுக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 50 லட்சம் மாணவர்களில் 9 சதவிகிதம் பேர் போதைக்கு அடிமையாகி உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது என அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவிகளும் போதைப் பொருளுகு அடிமையாவது வேதனையை ஏற்படுத்து உள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கின்றனர். காவல்துறையின் உதவியின்றி கஞ்சா சப்ளையாவதற்கு வாய்ப்பில்லை என்பதால், உள்ளே இருக்கும் அந்த கருப்பு ஆட்டை களையெடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பெட்டிக்கடைகளில் கிடைப்பது போன்றே கஞ்சாவும் பரவலாகி இருப்பதாக அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள் மக்கள் நலன் விரும்பிகள். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்றால், கஞ்சா அதைவிட மோசமானது. அதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்னும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

கஞ்சா போதை என்பது ஒரு தலைவலி போல வந்து செல்வதல்ல ஒரு தலைமுறையையே சீரழிக்கும் ஆபத்தானது. இது ஒரு குடும்பத்தை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழகத்தையே தலைகுனியச் செய்துவிடும். இதை உணர்ந்து தமிழக அரசும், காவல்துறையும் விழிப்போடு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Exit mobile version