காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வரும் நவம்பர் 10 முதல் மறு உத்தரவு வரும் வரை விடுப்பு எடுக்கக் கூடாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் வரும் 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு, சபரிமலை ஐயப்பன் கோவிவில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு, ரபேல் விமான ஊழல் வழக்கு மற்றும் பிரதமர் மோடியைத் தரம் தாழ்ந்து விமர்சித்தாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஆகிய 4 முக்கியமான வழக்குகளை இவர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்குகளில் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக கருதப்படுகிறது. இவ்வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிஜிபி திரிபாதி நவம்பர் 10 தேதி முதல் மறு உத்தரவு வரும் வரைகாவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். மேலும் சட்டம் ஒழுங்கு பணிக்கு வெவ்வேறு இடங்களுக்கு செல்ல தயார்நிலையில் இருக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.