எருதுவிடும் விழாவை தடுக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல்

ஓசூர் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதுவிடும் விழாவை தடுக்க முயன்ற போலீசார் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த மதகொண்டபள்ளியில் எருது விடும் நிகழ்ச்சிக்கு ஒரு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு காவல்துறையில் முறையாக அனுமதி வாங்கப்படவில்லை. இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார், நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கலைந்து போகும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த கும்பல் ஒன்று போலீசார் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டன.

Exit mobile version