இமயமலை பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் யாத்திரை தொடங்கியது

இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் யாத்திரை தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வது வழக்கம்.அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பகல்காம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு பாதைகள் வழியாக அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது. யாத்திரையை சீர்குலைக்கும் முயற்சியில் பயங்கரவாதிகள் ஈடுபடாமலிருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version