ராபர்ட் வதேராவின் முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, பிரிட்டன் நாட்டின் தலைநகர், லண்டனில், 1 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு சொத்து வாங்கியதும், பின்னர் அது கைமாற்றியது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி, வாத்ரா, டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏப்ரல் 1ஆம் தேதி அவருக்கும் அவரது உதவியாளருக்கும் , முன்ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில் ராபர்ட் வதோராவுக்கு வழங்கியுள்ள முன் ஜாமீனைத் ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி வதோரா சாட்சிகளை கலைக்க முயற்சி செய்வதாக தெரிவித்துள்ள அமலாக்கதுறை, முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது