இம்ரான்கானை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த ஆண்டு அந்நாட்டின் மக்களவைத் தேர்தலின் போது,வேட்புமனுத்தாக்குதலில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை, அந்நாட்டு லாகூர் உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. அந்த வேட்புமனுவில் மகள் இருப்பதை இம்ரான்கான் மறைத்திருப்பதால், நாட்டின் பிரதமர் நேர்மையற்றவராக இருப்பதாகவும், அவரைத் தகுதி நீக்கம் செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இம்ரான்கானுக்கு எதிராக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இதேபோல் தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.