தாளவாடி மலைப்பகுதியில் இரவு நேரங்களில் காய்கறி ஏற்றி செல்ல அனுமதி கோரி மனு

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை இரவு நேரங்களில் அனுமதிக்க வேண்டும் மாவட்ட வன அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் விளைவிக்கின்ற காய்கறி பொருட்கள் ஈரோடு கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தாளவாடி மலைப்பகுதி என்பதால் கடந்த சில மாதங்களாக இரவு 9 மணிக்கு மேல் எந்த வாகனமும் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவில் காய் கறி வாகனங்கள் செல்ல அனுமதிக்குமாறு மாவட்ட வன அலுவலர் கே.வி.ஏ நாயுடுவிடம் தாளவாடி விவசாயிகள் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

Exit mobile version