ஹைதராபாத்தில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்த நபரின் வங்கிக் கணக்கிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
ஹைதராபாத் ஜூபிலி ஹீல்சில் உள்ள ரஹ்மத் நகரை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் சோமடோவில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆடர் செய்த சில மணி நேரத்திலேயே சாம்பார் சாதம் வந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த இன்ஜினியர் கூகுளில் கஸ்டமர் கேர் நம்பரை தேடி எடுத்து போன் செய்து தனது பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
எதிரே போன் எடுத்த நபர் சோமட்டோ வாடிக்கையாளர் அதிகாரி போல் பேசியுள்ளார்.. இன்ஜினியர் நடந்த விவரத்தை கூறி தனது பணத்தை திருப்பித் தரவேண்டும் என்று சத்தமாக பேசி உள்ளார்.. எதிரே பேசிய நபர் பணத்தை திருப்பித் தருகிறேன் என்றும் தற்போது உங்கள் போனுக்கு ஒரு கியு ஆர் கோடு வரும் அதனை ஸ்கேன் செய்தால் பணம் திரும்பி வந்துவிடும் என்று கூறியுள்ளார்..
இதனை நம்பி இன்ஜினியர் ஸ்கேன் செய்து முடித்த சில நொடிகளிலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்து உள்ளது இதனை கண்டு அதிர்ச்சியடைந்த என்ஜினீயர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் போலீசார் குற்றவாளியை தேடி வரும் வேளையில் இது குறித்து பதிலளித்துள்ள சோமடோ நிறுவனம் தங்களுக்கு வாடிக்கையாளரின் கஸ்டமர் கேர் நம்பர் கிடையாது என்றும் நிறுவனத்திற்கு ஆன்லைன் சாட் மற்றும் மெயில் சேவையில் மட்டும் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர்