ZOMATO டெலிவரிக்காக இந்தியா முழுவதும் ஐம்பதாயிரம் எலெக்ட்ரிக் வாகனங்கள்.. எப்போது? எப்படி? வாருங்கள் பார்க்கலாம்..!

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 18 நகரங்களில் 50000 எலெக்ட்ரிக் வாகனங்களானது உணவு டெலிவரிக்காக விநியோகம் செய்யப்பட இருக்கிறது. இதனை சன் மொபிலிட்டி என்கிற நிறுவனமானது சொமடோ நிறுவனத்துடன் இணைந்து செய்ய உள்ளது. இதனை 24 மாதங்களுக்குள் நிறைவேற்ற முடிவு எடுத்துள்ளனர். மேலும் டெலிவரியானது ஒரு நாளின் இறுதி மைல் வரை எந்த தடையும் இல்லாமல் நடப்பதற்காக சன் மொபிலிட்டி நிறுவனமானது இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த செயல்பாடு சந்தைக்கு வந்துவிட்டால் காற்றில் உள்ள கார்பன் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்று சன் மொபிலிட்டி நிறுவனத்தில் சிஇஓ ஆனந்த் பாட்ஜட்யா தெரிவித்துள்ளார்.  2030க்குள் இந்தியாவில் 100 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடானது இருக்க வேண்டும் என்பதற்கான  விழிப்புணர்வாக இது இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

டெலிவரியின் போது பேட்டரியின் சார்ஜ் தீர்ந்துவிடுமானல் எளிதாக மற்ற பேட்டரியை உடனடியாக மாற்றி விடலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்காக சன் மொபிலிட்டி பேட்டரி மாற்றும் மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். 18 நகரங்களில் 358 இடங்களில் இந்த மையமானது அமைக்கப்படும் என்று சன் மொபிலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version