தஞ்சையில் பெட்ரோல் போட்டதற்கு பணம் கேட்ட ஊழியரை தாக்கியதாக வெளியான சிசிடிவி காட்சியை அடுத்து, தாக்குதலில் ஈடுப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மானோஜிப்பட்டியைச் சேர்ந்த அன்பு, ரகுமான் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர், தனது இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு,பணம் தர மறுத்து அன்பைத் தாக்கியுள்ளார். பெட்ரோல் பங்கில் இருந்த பொருட்களையும் சூறையாடிவிட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதில் காயமுற்ற அன்பு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அன்பு கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட சந்திரகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.