நாகையில் குழந்தை கடத்த வந்ததாக தவறாக நினைத்து குப்பை பொறுக்க வந்த நபரை பொதுமக்கள் அடித்துள்ளனர். நாகை மாவட்டம் செம்மரை கடைத்தெரு பகுதியில் 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அங்கு சாக்கு பையுடன் வந்த மர்ம நபர், அங்கிருந்த ஒரு குழந்தையிடம் பேசிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், குழந்தையை கடத்த முயன்றதாக நினைத்து அவருக்கு தர்ம அடித்து கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர் தேனியை சேர்ந்த ராஜா என்பதும், நாகையில் பல ஆண்டுகளாக குப்பைகளை சேகரித்து அதனை விற்று பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
குப்பை பொறுக்குபவரை குழந்தை கடத்த வந்தவர் என்று தவறாக நினைத்து பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.