நேபாளத்தில் கம்யூனிஸ்ட் அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவுக்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
கே.பி. சர்மா ஓலி தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு நேபாள நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் குத்தி மசோதாவை தாக்கல் செய்தது. தனியார் மற்றும் பொது அறக்கட்டளைகளை தேசிய மயமாக்குவதே இந்த மசோதாவின் நோக்கமாகும். அரசின் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் தலைநகர் காத்மண்டுவில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். நில அபகரிப்பு கும்பல்களுக்கு இந்த மசோதா சாதகமாக உள்ளதாக குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், நூற்றாண்டுகளை கடந்த நேபாளத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மசோதா உள்ளதாகவும் கூறுகின்றனர். நாடாளுமன்றத்தில் இந்த மசோதா விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.