சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தொகை நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இன்று முதல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதத்தொகை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், வினியோகித்தல், வர்த்தக ரீதியிலான போக்குவரத்து, மொத்த விற்பனை உள்ளிட்டவைகளுக்கு முதல் அபராதத்தொகையாக 25 ஆயிரமும், இரண்டாம் முறை கைப்பற்றினால் 50 ஆயிரமும், மூன்றாம் முறை கைப்பற்றினால் ஒரு லட்சம் ரூபாயும் அபராதத்தொகையாக வசூலிக்கப்படும். நான்காம் முறை இதே தவறை செய்தால் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்ற வாகனம், அதன் நிறுவனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்து, சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பெரிய வணிக நிறுவனங்களக்கு ஒரு அபராத தொகையும், சிறிய வணிக நிறுவனங்கள், சிறு விற்பனையாளர்கள் என தனித்தனியே அபராத தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.