நெல்லை மாவட்டம், அரியநாயகிபுரத்தில், இயற்கை முறையில் பயிரிடப்பட்ட வேர்க்கடலையின் விளைச்சல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடையநல்லூரை அடுத்துள்ள அரியநாயகிபுரத்தில், இயற்கை முறையில் வேர்க்கடலை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது . இதன் விளைச்சல் தற்போது அதிகமாக இருப்பதாகவும், இதனால் அதன் விலை அதிகமாக இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் வேர்க்கடலை விளைச்சல் அதிகமாக இருப்பதால், ஒரு குவிண்டால் 3000 முதல் 4000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளதால், வேர்க்கடலை விளைச்சல் மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.