மயில்களுக்கு குருணை மருந்து! என்ன ஆச்சு இந்த மனிதர்களுக்கு…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பயிர்களை காப்பாற்ற, குருணை மருந்தை தூவி மயில்களை கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

ராமநாத்தம் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரன், தனக்கு சொந்தமான வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளார்.

பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் மயில்கள் அதனை சேதப்படுத்தி வந்துள்ளது.

இதனை கண்ட விவசாயி பயிர்களை காக்க, வயலில் அதிக விஷத்தன்மை கொண்ட குருணை மருந்தை தூவி உள்ளார்.

இதனை கொத்தித் தின்ற 5 மயில்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக இடைச்செருவாய் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விவசாயி சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version