நீட் தேர்வு கடந்து வந்த பாதை!!

ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கும் இரண்டெழுத்து சொல் என்றால், தற்போதைக்கு அது நீட் தான். இந்த நீட் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அது எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன? எப்போது அமலுக்கு வந்தது? தமிழ்நாட்டில் எப்போது நடைமுறைக்கு வந்தது? போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்ல வருகிறது இந்த செய்தி தொகுப்பு…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்த தேர்வுகளுக்கு பதிலாக, இந்தியா முழுவதும் ஒரே தேர்வான நீட்டை நடத்த கடந்த 2012ம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்தது.2013 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து பல்வேறு கல்வி நிறுவனங்களும் மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.100க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் அதே ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்தது.

2017ஆம் ஆண்டு முதல் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.2017 முதல் தமிழ் உள்ளிட்ட 6 பிராந்திய மொழிகளில் நீட் தேர்வை மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்வு நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.அறிவித்தபடி செப்டம்பர் 13-ந் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது நீட்

Exit mobile version