முருகப்பெருமானையும், இந்து மதத்தையும் அவமதித்த இயக்குநர் வேலுபிரபாகரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்… இந்து மதத்தை அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என கூறிய இவர், கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கலாம்..
வேலு பிரபாகரன் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் என்ற பல பரிமானங்களைக் கொண்டவராவார். பெரும்பாலும் நாத்திகம் மற்றும் புரட்சிகர கருத்துகளை இவரது படங்களில் எடுத்துக்காட்டுகிறார்.
சினிமா துறையில் ஒளிப்பதிவாளராக இருந்த வேலுபிரபாகரன், 1989 ஆம் ஆண்டு நாளைய மனிதன் என்ற திகில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.. நாளைய மனிதன் , ஹாலிவுட் படமான Silent Rage ன் தழுவலாகும்.. அதன் தொடர்ச்சியாக 1990 ஆம் ஆண்டு அதிசய மனிதன் திரைப்படத்தை இயக்கினார். அதுவரை சினிமாவை சினிமாவாக எடுத்துக்கொண்டிருந்த வேலுபிரபாகரன், இந்து மத துவேஷத்தை தாம் இயக்கும் படங்களில் புகுத்த துவங்கினார்.. அதன் பின்னர் தான் இவருக்கு வீழ்ச்சியே ஆரம்பித்தது.. ஆர். கே. செல்வமணியின் தயாரிப்பில் அசுரன் மற்றும் ராஜாளி ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். இரண்டுமே தோல்விப் படங்களாக அமைந்தன..
பின்னர் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிக்கத்துவங்கினார்.. இந்து மதக்கடவுள்களை இழிவு படுத்தும் விதமாக 1997 ல் கடவுள் , 99 ல் சிவன், 2000 மாம் ஆண்டு புரட்சிக்காரன் என மீண்டும இவர் இயக்கிய படங்கள் அனைத்து தொடர்ந்து தோல்வியையே தழுவின.. .
2004 ம் ஆண்டு கமல்ஹாசனை நாயகனாக வைத்து படம் எடுக்க முற்பட்டார்.. கமல் ஒப்புக்கொள்ளாததால் அப்படம் கைவிடப்பட்டது. கடவுளை இழிவு படுத்தி படம் எடுத்தால் ஓடவில்லை என்பதால், காமப்படம் எடுக்கலாம் என்ற முயற்சியில் இறங்கினார் வேலு பிரபாகரன்… 2004 ஆம் ஆண்டு காதல் அரங்கம் என்ற வயது வந்தோருக்கான படத்தை இயக்கி இருந்தார்.. இப்படத்தை பார்த்த தணிக்கை வாரிய அதிகாரிகள் அதிர்ந்து போயினர்., படத்தில் ஆபாச காட்சிகளும், ஆபாச வசனங்களும், சர்ச்சைக் கருத்துகளும் நிறைந்து காணப்படுவதால் , இப்படத்தை வெளிளிட எந்த முகாந்திரமும் இல்லை என கைவிரித்தனர்..
அதன் பின் படத்தை வெளியிட தொடர்ந்து முயற்சித்து வந்த வேலு பிரபாகரன், படத்தில் இருந்த சர்ச்சைக்காட்சிகளை ஓரளவு வெட்டி வீசினார்.. அதோடு தன் சொந்த கதையையும் அதில் இணைத்திருந்தார். அதன் பின் ஒருவழியாக தணிக்கை சான்றிதழ் கிடைத்து 2006 ல் படம் வெளியானது.. ஆனால் இப்படம் வந்ததும் தெரியவில்லை… திரையரங்கை விட்டு போனதும் தெரியவில்லை… படுதோல்வியை சந்தித்தது.. காதல் கதை திரைப்படம் மிகுந்த சலிப்பை ஏற்படுத்தும் படமாக இருந்ததாக விமர்சகர்கள் தெரிவித்தனர்..
தொடர்ந்து தேவதாசி ,முகமூடிக் கூத்து, கலைஞனின் காதல் என பல படங்களை தயாரிக்க முற்பட்டும் தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் முடியாமல் போனது.. 2017 ல் ஒரு இயக்குநரின் காதல் டைரி என்ற திரைப்படம் தயாரானது.. ஆனால் அதுவும் ஓடவில்லை..
காதல் கதை என்ற என்ற படத்தில் நடித்த செர்லி தாஸ் என்ற இளம்பெண்ணை, தனது 60 வது வயதில் அதாவது கடந்த 2017 ம் ஆண்டு திருமணம் செய்து அதிர்ச்சியை கொடுத்தார் வேலு பிரகாரன்.. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் யாருக்கும் புரியவில்லை..
தன் திரைப்படங்களை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான விஷக்கருத்துகளை விதைப்பதற்காகவே பயன்படுத்தியதன் விளைவு தான் படம் வெற்றிபெறவில்லை என்ற உண்மையை அவர் இறுதிவரை உணரவே இல்லை.. தற்போது யூடியூப் களில் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் அவர் பேசி வந்தார்.. இந்து மதக்கடவுள்களை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டுவந்தார். நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு காரணம் இந்து மதம் தான் எனவும், இந்து மதத்தை அழிக்கும் வரை ஓயப்போவதில்லை எனவும் பேசி இருந்தார்.. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது..
இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பு, சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்த புகாரின்பேரில், வேலு பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மத, இன விரோத உணர்வுகளை தூண்டுவது, கலகம் செய்ய தூண்டுவது, தவறான தகவல் மூலம் பொதுமக்களை திசைத்திருப்புவது என ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.. இந்து மதம் குறித்து அவதூறு கருத்துகளை பரப்புவது தொடர்பாக , வெளிநாட்டில் பலருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது..