ஊராட்சி மன்ற தலைவரை, திமுகவினர் மிரட்டியதால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, புதுப்பாக்கம் கிராமத்தில், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிக் கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவரை, திமுகவினர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பாக்கம் நியாயவிலைக் கடையில் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை, அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் விக்கிரமன் மேற்பார்வையிட்டதுடன், பொதுமக்களை பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த திமுகவினர், தங்கள் கட்சிக் காரர்களுக்கே நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தகராறு செய்ததுடன், விக்கிரமனை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர்.

திமுகவினரின் இந்த அராஜக நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அராஜகம் செய்தவர்களை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களின் எதிர்ப்பால், திமுகவினர் அங்கிருந்து சென்றதைத் தொடர்ந்து, மீண்டும் வழக்கம் போல் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

Exit mobile version