மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீண்; விவசாயிகள் வேதனை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தல் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து இருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக  கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்த காரணத்தால் விற்பனை செய்ய வழியின்றி விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நனைந்த நெல் மூட்டைகளை உலர்த்துவதற்கான களம் இல்லாத காரணத்தினால் வேறு இடங்களுக்கு கொண்டு சென்று உலர்த்துவதாகவும், மீண்டும் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவர கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடப்பள்ளி மற்றும் அரக்கண்கோட்டை பாசன பகுதியில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த நெல் வயல்களில் தற்போது தீவிரமாக அறுவடை நடந்து வருகிறது. அதனைத்தொடர்ந்து அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்யவதற்காக அரசு சார்பில் 20 ககும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையங்கள் பெரும்பாலும் திறந்த வெளியில் அமைந்துள்ளதாலும் இடப்பற்றாக்குறை காரணமாகவும் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

 

Exit mobile version