சனிக்கிழமை தோறும் சிசிடிவி கேமராக்களை பராமரிக்க உத்தரவு

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிசிடிவி கேமராக்களை பராமரிப்பு தினமாக கடைபிடிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னைய அடுத்த தாம்பரம் சண்முகம் சாலை, ரங்கநாதபுரம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஜெருசலம் நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சிசிடிவி கேமராக்கள் சரிவர இயங்குகிறதா என ஆராய்ந்து, பழுது சரிசெய்யப்பட்டது. குறிப்பாக, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையை சிசிடிவி கேமராக்களை பராமரிக்க ஒதுக்கவேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பேரில், இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. கண்காணிப்பு சி.சி.டி.வி. கேமரா மூலம் பெருமளவு குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version