வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கலை வீடியோ பதிவு செய்ய உத்தரவு

வேட்பாளர்களின் வேட்பு மனுத் தாக்கலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஒரேகட்டமாக அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் அறைக்குள் வேட்பாளர் உடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வேட்பு மனுத்தாக்கலின்போது விதிகளை மீறுவோர் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வேட்புமனு தாக்கலின் போது 3 வாகனங்களில் மட்டுமே ஆட்கள் வர அனுமதிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version