ரபேல் விவகாரம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மக்களவையில் விவாதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.
ரபேல் உள்ளிட்ட விவகாரங்களால் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் முடங்கின. இந்நிலையில், ரபேல் விவகாரம் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன.
இதையடுத்து ரபேல் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் இன்று விவாதம் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு நடக்காத பட்சத்தில் மக்களவையை இன்றும் முடக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.