பிசான சாகுபடிக்காக அடவிநயினார்கோவில் அணையில் இருந்து 125 நாட்களுக்கு நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடப்பாண்டு பிசான சாகுபடி செய்வதற்காக அடவிநயினார்கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரை அடவிநயினார்கோவில் அணையில் இருந்து இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி வரை மொத்தம் 125 நாட்களுக்கு 60 கனஅடி வீதம் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் சுமார் 7 ஆயிரத்து 600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.