ஈரோட்டில், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலையை, மின்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் சார்பாக பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 6 அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலையை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர. இந்நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.