தூத்துக்குடியில் தக்க்ஷின் பாரத் சரக்கு பெட்டக முனையம் திறப்பு

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, தூத்துக்குடியில் புதிதாக தொடங்கப்பட்ட புதிய சரக்கு பெட்டக முனையம் உதவும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தக்க்ஷின் பாரத் சரக்கு பெட்டக முனையம் புதிதாக கட்டப்படுள்ளது.

இங்கிருந்து புதிய சரக்கு கப்பல் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டெல்லியில் இருந்து மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சரக்கு பெட்டக முனைய வழித்திடம் மூலம் கிழக்கு இந்திய நாடுகளுக்கு சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எளிதாக அமையும் என்றார்.

Exit mobile version