நாட்டின் மிக உயரத்தில் உள்ள ஸோஜிலா கணவாய் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸோஜிலா கணவாய் மூடப்பட்டது. 9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த கணவாய், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லே பிராந்தியத்தியத்தை இணைக்கிறது. கடும் குளிர் நிலவி வரும் இப்பகுதியில் கோடையை ஒட்டி, பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியுள்ளன. இதனையொட்டி, சாலை போக்குவரத்துக்கு சாதமான சூழல் நிலவுவதால், இந்த கணவாய் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த கணவாயை பாகிஸ்தான் கைப்பற்றி வைத்திருந்த நிலையில், பின்னர் இந்தியா அதனை மீட்டது குறிப்பிடத்தக்கது.