தென்ஆப்பிரிக்க சமையல்காரர் ஒருவர், பூச்சிகளின் ருசியை அறிந்து கொள்ள முயன்று, தற்போது பூச்சி உணவு மட்டுமே கொண்ட உணவகத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து சென்றிருந்த சமையல்காரர் மரியோ பர்னார்ட், உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார். அங்கு கொடுக்கப்பட்ட வறுத்த தேள் மற்றும் மசாலாவுடன் சேர்த்த பூச்சிகளை அருவருப்பால் உண்ண முடியாமல் உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
ஆனால் அந்த பூச்சிகளின் சுவை எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மரியோவுக்கு அதிகரிக்கவே அது அவரை தென்ஆப்பிரிக்காவில், முதல் பூச்சி உணவகம் ஒன்றை தொடங்க தூண்டியுள்ளது. இதுகுறித்து பேசிய மரியோ, இன்செட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள, இந்த பூச்சி உணவகம் உலகம் முழுவதும் பல இடங்களில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பூச்சிகள் எந்த உணவை உண்ணுகிறதோ அதே உணவின் சுவை நமக்கு தருவதாகவும், உலகளவில் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், பூச்சி உணவே எதிர்கால உணவு தேவையை பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.