டிராபிக் சிக்னலை மீறினால் ஒரே கடி… வைரலாகும் நாயின் வீடியோ

ஜார்ஜியாவின் சாலைகளில் நாய் ஒன்று போக்குவரத்தை சரிசெய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினசரி சாலைகளில் பயணிப்பவர்கள் டிராபிக் சிக்னல்களில் சிக்கி தவிப்பது வழக்கம். அதேபோல் சாலை விதிகளை மீறுபவர்களை பார்க்கும்போது நாம் டிராபிக் போலீசாக இருந்தால் ஏதாவது செய்யலாம் என நம்மை மீறி ஒரு கோபம் வரும்.

இந்நிலையில் தென்மேற்கு ஜார்ஜியா நாட்டிலுள்ள பத்தூமி நகரத்தில் நாய் ஒன்று டிராஃபிக் சிக்னலில் நின்று கொண்டு போக்குவரத்தை சரிசெய்கிறது.

சாலை விதிகளை மீறுபவர்களை கண்டால் குரைக்கிறது. பாதசாரிகள் சாலைகளை கடக்கும் போது மறுபுறம் வரை அவர்களை விட்டு செல்கிறது.

இந்த வீடியோவை நாயின் உரிமையாளர் இணையத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது

காணொளியில் காண: https://www.facebook.com/beqa.cinadze/videos/2759870720718898/

Exit mobile version