அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
உலகின் பொருளாதார வல்லரசு நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த சில வருடங்களாக வர்த்தகப் போர் நிலவி வந்தது.
இதனால், இவ்விரு நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில், தங்களுக்குள் நடக்கும் வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், இரு நாடுகளும் வர்த்தகத்தில் உடன்பாடு செய்து கொள்ள ஒப்புக் கொண்டது. இதையடுத்து, வாஷிங்டனில், இருநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் வர்த்தகப்போரை முடித்து வைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன துணை பிரதமர் லீயு ஹி கையெழுத்திட்டனர். இதன்மூலம், இரண்டு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு இடையில் இருந்த பதற்றம் தணிந்துள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப், தான் சீனா செல்லும் நாள் தொலைவில் இல்லை என்று குறிப்பிட்டார்.