புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தை திருடிய முதியவர்

புதுச்சேரியில் முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள நிலையில், வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருவடிக்குப்பம் பகுதியை சார்ந்த பாபு என்பவர் சித்தானந்தா கோவில் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்த விசாரணை நடத்திய காவல்துறையினர், அருகிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் முதியவர் ஒருவர் யாரும் இல்லாத நேரத்தில் லாவகமாக அந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version