புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில முதியவரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி, தென்றல் நகர் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த ஜெகதீஷ் என்ற முதியவர் தனியாக வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் 5ஆம் வகுப்பு படிக்கும் 10வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. அந்தச் சிறுமி கூறிய தகவலை அடுத்து, அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு வட மாநில முதியவருக்கு தர்ம அடி கொடுத்து, பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.